முகப்பு சினிமா `3 மணிநேரத்துக்கே முடியல... அவங்களுக்கு ராயல் சல்யூட்!’- கவச உடை பணியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்

`3 மணிநேரத்துக்கே முடியல… அவங்களுக்கு ராயல் சல்யூட்!’- கவச உடை பணியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்

தஞ்சாவூரில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களைப் பல்வேறு பகுதிகளுக்குப் பணிக்கு செல்வதற்காகத் தினமும் மூன்று அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்தப் பேருந்துகளின் டிரைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகப் பாதுகாப்பு கவச உடை கொடுக்கப்பட்டுள்ளது. அதை அணிந்துகொண்டே டிரைவர்கள் பேருந்தை இயக்கி வருகின்றனர்.

அரசுப் பேருந்து

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் அதியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூதலூர் பகுதிகளுக்குச் சென்று பணிசெய்து வந்த சுகாதார துறை,வருவாய் துறையைச் சேர்ந்த அரசு அலுவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இவை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வழியாகத் திருவிடைமருதூர் வரை, தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை மற்றும் தஞ்சாவூரிலிருந்து பூதலூர் வரை எனத் தலா ஒரு பேருந்து என மொத்தம் மூன்று பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு அலுவலர்கள் பணிகளுக்குச் சென்று வருகின்றனர்.

கொரோனா பணியில் டிரைவர்

தற்போது பேருந்தை ஓட்டும் பணியில் உள்ள டிரைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகப் பாதுகாப்பு கவச உடை அளிக்கபட்டுள்ளது. அதை அணிந்துகொண்டே டிரைவர்கள் பேருந்தை ஓட்டி வருகின்றனர். இந்தப் பணியில் இருக்கும் சிவக்குமார் என்ற டிரைவரிடம் பேசினோம். “கொரோனா பணிக்காக அரசுப் பணியாளர்கள் பணிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் பேருந்தை இயக்குவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் பணிக்கு வரலாம் என நிர்வாகத்தில் தெரிவித்தனர். உடனே, புறநகர் மற்றும் நகர டிரைவர்கள் என 19 பேர் பணிக்கு சென்றோம். சுழற்சி முறையில் ஒவ்வொருவராகப் பணிக்குச் சென்று வருகிறோம்.

காலை அரசு அலுவலர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் நாங்கள் அங்கேயே தங்கி மாலை பணி முடிந்த பிறகு அவர்களை அழைத்து வருவோம். `எத்தனையோ டிரைவர் இருக்கும்போது நீங்க மட்டும் ஏன் ரிஸ்க் எடுக்குறீங்க’னு வீட்டில் கேட்பார்கள். அவர்களிடம், `சேவை செய்றதுக்கு இது ஒரு வாய்ப்பு. இந்த நேரத்தில் ஓடி ஒளியக் கூடாது’னு சமானதானப்படுத்திவிட்டு பணிக்குச் சென்று வருகிறோம்.

அரசு ஊழியர்கள்

எங்களுடைய பாதுகாப்பை முக்கியமாகக் கருதிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியில் இருப்பவர்கள் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு உடை போலவே உள்ளது. அதை அணிவதற்கே 15 நிமிடத்துக்கு மேல் ஆகிறது. முகம் உட்பட உடல் முழுதும் மூடபட்ட நிலையில் அந்த உடையை அணிந்துகொண்டு பேருந்தை ஓட்டுபோது உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டும். ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.

அப்போதுதான் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கிட்டதட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இது போன்ற உடையை அணிந்துகொண்டு வேலை செய்யும் அவர்களின் நிலையை உணர முடிந்தது. நாங்க போக வர என ஒரு டிரிப்புக்கு மொத்தமே 3 மணி நேரம்தான் இதை அணிந்திருப்போம் இதையே நம்மால் தாங்க முடியவில்லையே? மருத்துவபணியில் உள்ளவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிப்பார்கள். அந்த நேரத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு ராயல்சல்யூட் அடிப்போம்.

டிரைவர்

எங்கள் பணியைப் பாராட்டி எங்கள் உயர் அதிகாரி உள்ளிட்ட பலர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி பல சமயம் பேருந்தை இயக்கியிருக்கிறோம். ஆனால், இப்போது ஓட்டுவதை பெருமிதமாக நினைக்கிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...