முகப்பு தொழில்நுட்பம் 364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில...

364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை

திருமலை: தெலங்கானாவில் 364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரத்து 937 பேர் தெலங்கானா வந்தனர். இதில் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள் 30 பேர், அவர்களுடன் தொடர்புடைய 20 பேர் என மொத்தம் 50 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். மேலும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 1089 பேரில், 172 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மூலம் 93 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதன் மூலம் இன்று(நேற்று) வரை 364 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதித்தவர்களில் 45 பேர் சிகிச்சைக்கு பிறகு  வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது காந்தி அரசு மருத்துவமனையில் 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லிக்கு சென்று வந்தவர்களில் இன்னும் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கும், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் என 3 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் மொத்த பரிசோதனை முடிவுகளும் வந்துவிடும்.ஊரடங்கு மூலம் தற்போது நாம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி உள்ளோம். இந்த வைரஸ் நம் நாட்டில் உருவானது அல்ல. பிரதமர்  மோடியும் தினந்தோறும் இரண்டு முறை போனில் பேசி வருகிறார். அவரிடம் எனது தரப்பில் இருந்து, ‘‘ஊரடங்கு ஜூன் 3 தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்’’ என தெரிவித்துள்ளேன். ஊரடங்கு ஜூன் 3ம் ேததி வரை அமல்படுத்தினால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகமாக  இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Must Read

தமிழர்களே ஜாக்கிரதை: இன்று லண்டனில் மகரந்த(பொலுன்) துகள் காற்றில் அதிகம்- அல்ர்ஜி வரலாம்

லண்டனிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று அளவுக்கு அதிகமாக பொலுன் என்று சொல்லப்படும் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருப்பதாக நுன் துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு இதனால் அலர்ஜி (ஒவ்வாமை)...

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே,...

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ``மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி...

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை....

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!உச்ச நீதிமன்றம்புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த...