முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் 40 ஆயிரம் பேருக்கு பிஎஃப் பணம்: கொரோனா சமயத்தில் உதவி!

40 ஆயிரம் பேருக்கு பிஎஃப் பணம்: கொரோனா சமயத்தில் உதவி!

இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. 3 மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணை செலுத்த அவகாசம், ஏடிஎம் கட்டணங்கள் ரத்து உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. அதோடு, சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது.

மார்ச் 29ஆம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது. கொரோனா பீதியால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நோய்த்தொற்று பெருமளவில் ஏற்படும் போது உறுப்பினரின் பிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள தொகையில் 75 சதவீதம் அல்லது 3 மாதத்திற்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு மிகாமல் முன்தொகை பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 17ஆம் தேதி வரையில் 40,826 பிஎஃப் சந்தாதார்களுக்கு மொத்தம் ரூ.481.63 கோடியை வழங்கியுள்ளது தொழிலாளர் நிறுவனம். இத்திட்டத்தின் கீழ் என்.எல்.சி.என், டாடா கன்சல்டன்ஸி, விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகப் பணத்தைப் பிஎஃப் சந்தாதார்களுக்குப் பட்டுவாடா செய்துள்ளன. அதிகபட்சமாக, நெய்வேலி லிக்நைட் நிறுவனம் 3,255 விண்ணப்பங்களுக்கு ரூ.84,44,00,000 வழங்கியுள்ளது.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ரூ.43,34,04,641 பட்டுவாடா செய்துள்ளது. விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் ரூ.40,99,37,800, என்.டி.பி.சி. நிறுவனம் ரூ.28,74,21,531, ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.27,14,03,862 என்ற அளவில் பட்டுவாடா செய்துள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் குறைந்த தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என்பதோடு, இந்தத் தொகை முன் பணமாக வழங்கப்படுவதால் வருமான வரி விலக்கு இதற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; காணாமல் போன பாலம் – கைகோர்த்த கன்னியாகுமரி இளைஞர்கள்!

மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன. இதில் தண்ணீர் தேக்கத்தில் நீர் மின்நிலையம் அமைந்துள்ளது. எனவே மின் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர்...

சிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா : கேப்டன் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அணியின் ஆல் ரவுண்டர் . சமீபத்தில் இவர் தந்தையாகவுள்ள தகவலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக், ஆல்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து: உடல் சிதறி ஒருவர் பலி!

வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்புக்கு தகுந்தவாறு சில தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது....

பொதுத்தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை!

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம்...

தனுஷ் படத்தில் நடிக்க பணம் தரவேண்டும் என மோசடி: மர்ம நபர் பற்றி கார்த்திக் நரேன் எச்சரிக்கை

துருவங்கள் 16 படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் . அதன் பிறகு நரகாசூரன் மற்றும் மாஃபியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மாஃபியா படம் சென்ற பிப்ரவரி மாதம்...