முகப்பு சினிமா `5,309 கி.மீ நீளம்; தூர்வாரப்படும் 1,325 வாய்க்கால்கள்!’-தஞ்சையில் குடிமராமத்துப் பணிகள் தீவிரம்

`5,309 கி.மீ நீளம்; தூர்வாரப்படும் 1,325 வாய்க்கால்கள்!’-தஞ்சையில் குடிமராமத்துப் பணிகள் தீவிரம்

தஞ்சாவூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 நாள் பணியாளர்களை கொண்டு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆய்விற்கு சென்ற கலெக்டர் தானே வாய்க்காலில் இறங்கி மண் வெட்டியின் மூலம் தூர் வாரும் பணியில் ஈடுபட்டார். கலெக்டரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாசன வாய்க்காலை தூர் வாரும் கலெக்டர்

தஞ்சாவூரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது.அத்துடன் ஆறுகளிலிருந்து `டி’ பிரிவு என சொல்லப்படுகிற வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்கால்களை அந்தந்த கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் வாளமரக்கோட்டை, காட்டூர், தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மண் வெட்டியை கையில் எடுத்து, தானே வாய்காலில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டார். மண்ணை வெட்டி வாய்க்காலின் கரையில் போட்டார். அத்துடன், “நம்ம ஊருக்காக, நம்ம விவசாயிகளுக்காக இந்தப் பணியைச் செய்கிறோம்.

ஆய்வு செய்த கலெக்டர்

இதில், எந்த சுனக்கமும் இல்லாமல் ஏனோ தானோ வென்று செய்யாமல், முழுமையாக முறையாக செய்யும் பட்சத்தில் உங்க ஊருக்கும் நல்லது நடக்கும் நமக்கும் சந்தோஷமாக இருக்கும். நம்முடைய முதுகெலும்பான விவசாயிகளும் மகிழ்ச்சியாக விவசாயம் செய்வார்கள்’’ என கூறியிருக்கிறார். இதை கேட்ட அனைவரும் நெகிழ்ந்தததுடன் கலெக்டருக்கு நன்றி கூறினார்கள். இதையடுத்து, `இந்தப் பணியை சிறப்பாகச் செய்வோம் சார்’ என உறுதி கூற விறு விறுப்பாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து கலெடர் கோவிந்தராவிடம் பேசினோம். “தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணிதுறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலம் ரூ.128 கோடியில் குளங்கள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. இதன் மூலம் தலா ரூ 1 லட்சம் மதிப்பில் 608 குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதில், முத்தாய்ப்பான விஷயம் என்னவென்றால் ஆறுகளிலிருந்து டி பிரிவு வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் செல்கிறது.

கலெக்டர் கோவிந்தராவ்

இந்த வாய்கால்கள் சேதமடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இதனால், தண்ணீர் வந்தும் பயன் பெற முடியாமல் விவசாயிகள் இது வரை தவித்தனர். அதன்படி எந்தெந்த ஊர்களில் தண்ணீர் செல்லாத படி வாய்கால்கள் இருக்கிறது என்பது குறித்த புள்ளி விபரங்களை கடந்த டிசம்பர் மாதமே எடுத்துடன் அதனை தூர் வாருவதற்கு எவ்வளவு செலவாகும் என திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

அதன்படி அந்த வாய்க்கால்களை நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒரு வகையில் பாசன வாய்க்கால்கள் புத்துயிர் பெறுவதுடன் மற்றொரு வகையில் 100 நாள் பணியாளர்களுக்கு வேலைகிடைத்து வருமானமும் கிடைக்கிறது.

கலெக்டர் கோவிந்தராவ்

ஒரு நபருக்கு 32 மீட்டர் என ஒதுக்கபட்டு இதன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5,309 கிலோ மீட்டர் நீளத்தில் 1,325 வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது. `இது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இதனை முறையாகச் செய்யுங்கள்’ என கூறி ஊக்கப்படுத்துவதுடன் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறேன். கடைமடை பகுதியில் உள்ள குக்கிராமத்தின் வயலுக்கு அருகில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் பாய்வதால், நிச்சயம் விவசாயிகளுக்கு பெரிய நன்மையை இந்தப் பணி தரும். ஊரும் பசுமையாக மாறும்’’ என்றார்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...