முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் Arnab Attacked: அர்னாப் கோஸ்வாமி மீது பல பிரிவுகளில் வழக்கு

Arnab Attacked: அர்னாப் கோஸ்வாமி மீது பல பிரிவுகளில் வழக்கு

தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோசுவாமியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோசுவாமி, காரசாரமான அரசியல் விவாதங்களுக்குப் புகழ் பெற்றவர். இந்நிலையில், அர்னாப் கோசுவாமி aடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுக்கப் பரவி வருகிறது.

இதுகுறித்து அர்னாப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இதற்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அர்னாப் கோசுவாமி மீது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைத்தல், மதப் பிரிவினையைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி 2சாதுக்கள் உட்பட மூன்று பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சோனியா காந்தியை தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் மீது பிரிவுகள் 117, 120பி, 153(ஏ), 153(பி), 295(ஏ), 500, 504, 506 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.சி.பி. வினித்தா சாஹு தெரிவித்துள்ளார். மேலும், சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...