முகப்பு சினிமா Corona Live Updates: `தமிழகத்தில் 2.5 லட்சம்; சென்னையில் ஒரு லட்சம்!’ - கொரோனா நிலவரம்

Corona Live Updates: `தமிழகத்தில் 2.5 லட்சம்; சென்னையில் ஒரு லட்சம்!’ – கொரோனா நிலவரம்

தமிழகத்தில் 5,879 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,013 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,877ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 17 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,94,374 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,93,58,659 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 5,25,689 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...