முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் Corona Live Updates: தமிழகத்தில் 2.57 லட்சத்தை கடந்த பாதிப்பு! - புதிதாக 5,517...

Corona Live Updates: தமிழகத்தில் 2.57 லட்சத்தை கடந்த பாதிப்பு! – புதிதாக 5,517 பேருக்குத் தொற்று

புதிதாக 5,517 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,471 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,526 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,132-ஆக அதிகரித்துள்ளது.

Corona

சென்னையில் மேலும் 1,065 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,065 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,951 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: `தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜுக்கு கொரோனா!

செல்வராஜ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா!

சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read: `தனிமைப்படுத்தல்; திடீர் உடல்நலக் குறைவு!’ – மருத்துவமனை விரைந்த ஆளுநர் பன்வாரிலால்

பன்வாரிலால் புரோஹித்

தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வார். ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ளும் ஆளுநரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா:`வெளியே வந்து சாப்பிடுறாங்க; டீ குடிச்சுட்டு போறாங்க!’ – நோயாளிகளால் பதறும் திருச்சி

இந்தியாவில் 17 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,403ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,46,879 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: அறைகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் கருவி… சர்ச்சையும் விளக்கமும்!

கொரோனா – உலக நிலவரம்!

Corona

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,77,91,377 உயர்ந்துள்ளது. 6,83,988 அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,20,239 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், 1,54,361 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Also Read: `அவரை நம்பி வரும் ஏழைகளுக்குதான் இழப்பு!’ – கொரோனா பலிகொண்ட கோவை நரம்பியல் மருத்துவர்

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...