முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் Coronavirus: அமெரிக்க குடியேற்றத்திற்கு தற்காலிக ரத்து!!

Coronavirus: அமெரிக்க குடியேற்றத்திற்கு தற்காலிக ரத்து!!

அமெரிக்காவில் குடியேறுவதை அந்த நாட்டின் அதிபர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். கொரோனா பெரிய அளவில் அந்த நாட்டில் பரவி வருவதால் இந்த முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் இன்று பதிவு செய்து இருக்கு ட்வீட்டில், ”கண்ணுக்கு தெரியாத விரோதி நம்மை தாக்கியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்கர்களின் வேலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதையடுத்து அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியேறுவதற்கு அனுமதி அளிக்கும் குடியேற்ற அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து கையெழுத்திடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 7,92,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 128 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சம் பேரில் 12,167 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுக்கு செல்லும் விசாவை அந்த நாடு முடக்கியுள்ளது. குடியேற்ற விசா, ஹெச்-1பி விசாவில் இந்தியர்கள் அதிகளவில் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த வாரம் வெளியான புள்ளி விவரத்தின்படி கொரோனா காரணமாக அந்த நாட்டில் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 2 கோடியே 20 பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.

அமெரிக்கா டாலருக்கு எதிராக இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஜீரோ டாலருக்கும் கீழே இறங்கியதை அடுத்து 75 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இருப்பில் வைக்குமாறு அந்த நாட்டுக்கு ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...