முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் IPL 13: எப்படியாவது ஐபிஎல் தொடர் நடக்கணும்... பட்லர் ஆர்வம்!

IPL 13: எப்படியாவது ஐபிஎல் தொடர் நடக்கணும்… பட்லர் ஆர்வம்!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் காரணமாக கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது.

அதிக ஆர்வம்
ஐபிஎல் தொடரில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். ஒருபுறம் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய தொடர்
மறுபுறம் மற்றொரு இங்கிலாந்து வீரர் குறைந்த அளவிலான போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில்,“ தற்போதைக்கு எவ்வித செய்தியும் இல்லை. முதலில் ஒத்திவைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் தற்போது சூழல் மேலும் மேசமடைந்துள்ளது. இது உடனடியாக சரியாக வாய்ப்பில்லை. உலக கிரிக்கெட்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய தொடர். அதனால் குறைந்த அளவினான போட்டிகள் கொண்ட தொடராக இந்தாண்டு நடந்தால் சிறப்பாக இருக்கும்.

அஸ்வினுடன்
மேலும் பட்லர் தன்னை யாருடன் தற்போது தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்ற கேள்விக்கு அளித்த பதிலில், “ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புக்றேன். மான்கட் ரன் அவுட் செய்து ஓராண்டு ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போதும் அந்த போட்டோவை வீட்டின் உள்ளேயே இருங்கள், வெளியே செல்ல வேண்டாம் என அதிகளவில் ட்விட்டரில் பகிர்ந்தேன்” என்றார்.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...