முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் LIVE: கொரோனா: ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூ!

LIVE: கொரோனா: ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூ!

உலகளவில் வைரஸால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர். இதுவரை 199 நாடுகளில் பரவியிள்ள கொரோனா வைரஸுக்கு 24 ஆயிரத்து 065 பேர் இறந்துள்ளனர். 5 லட்சத்து 31 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் தினமும் 700 பேருக்கு மேல் இறந்து வருகின்றனர்.

இந்தியாவில் வைரஸ் தாக்குதலால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரம் குறித்து விரிவாக இதில் பார்க்கலாம்.

LIVE UPDATE

*ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரேசன் அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

*விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஊர் மக்களே மஞ்சள், வேப்பிலை கலந்து கிருமி நாசினி தயாரித்து தெருக்களில் தெளித்து வருகின்றனர்.

*துபாயிலிருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 22ஆம் தேதி அவர் நாடு திரும்பியபோது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

*தமிழ்நாட்டில் நான்காவது தனியார் கொரோனா வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போரூர் ராமசந்திரா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

*தமிழகம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்த 54 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி படுத்தவேண்டும்

*அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய தடை இல்லை. சமைக்கப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்விகி,சொமோட்டோவுக்கான தடை தொடரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகள் கொரோனா வார்டாக மாற்ற தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவை மற்ற வார்டுகளிலிருந்து தனித்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளார். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

*1039 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் 933 பேரின் முடிவுகள் நோய் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

Must Read

மட்டன் றோலில் மட்டன் இல்லை என்று அடிபட்டு கொலை: கணடாவில் கொரோனா மத்தியில் இவர்கள் ஆட்டம்

அட எந்த விடையத்திற்கு அடித்துக் கொள்வது என்ற ஒரு நியதியே இல்லையாடா ? கனடா ரொரன்றோவில் உள்ள நந்தா உணவகத்தில், மட்டன் றோல்ஸ் தொடர்பாக இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய...

கொரோனா பிரச்சனை முடிந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க: காஜல் அகர்வால் கோரிக்கை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் . தற்போது இந்தியன் 2 உட்பட பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ஹீரோயினாக அவர் ஆகியுள்ளது. காஜல்...

பிரான்சில் ஊரடங்கு உத்தரவால் குடும்ப வன்முறை அதிகரிப்பு

நாட்டில் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது முதல் குடும்ப வன்முறை வழக்குகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் திங்கட்கிழமை 833 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்...

லாக்டவுன்: வீடியோகால் ஆப்களை பாலியல் சைட்டாக மாற்றும் டூட்ஸ்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிவிட்டது. அமெரிக்கா என்ற சர்வாதிகார நாடு கற்பனையில்கூட எதிர்பார்க்க முடியாத அழிவைச் சந்தித்து வருகிறது. கியூபாவைத் தவிர கொரோனாவை கண்டு பிற நாடுகள் அனைத்துமே அதிர்ந்துபோய்...

பணப் புழக்கத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

இந்திய வங்கி அமைப்பில் பண நெருக்கடி ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சந்தையில் பணப்புழக்கத்தை மேம்படுத்துவது, பணப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது, வாங்கிய கடனைத்...