முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் LIVE: தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா!

LIVE: தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா!

அச்சுறுத்தல் வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழக்கும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கொரோனா வைரஸால் இதுவரை 21,200 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

LIVE UPDATE:

* முழுவதும் பல்வேறு மாவடட்ங்களில் 22 ஆயிரத்து 364 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் 12 பேரும், ஈரோட்டில் 2 பேரும், சேலத்தில் 5 பேரும், நெல்லை, திருப்பூர், ஆகிய இடங்களில் தலா ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்த வட மாநில இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்ப்து உறுதியானது. தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த இரண்டாவது நபர் இவர் ஆவார். தற்போது இவர் நன்கு குணமடைந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இரண்டு முறை அவரது ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளதாகவும் இரண்டு நாள்களில் அவர் வீடு திரும்பவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

*கத்தார், குவைத் ஆகிய இடங்களிலிருந்து வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களது ரத்த மாதிரிகள் நெல்லை கொரோனா சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

*திருப்பத்தூரில் வெளிநாடுகளிலிருந்து வந்த 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

*அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...