முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் sethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் துக்கம்

sethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் துக்கம்

சந்தானம் நடித்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் . சந்தானம், சேது, பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, டாக்டராக பல சேவைகளை செய்து வந்த சேது திடீரென மரணமடைந்துள்ளார். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருப்பதாக சந்தானம் ட்விட்டரில் கூறியுள்ளார்.

மரண செய்தி குறித்து சந்தானம் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

என்னுடைய நண்பர் டாக்டர் சேது, இறந்துவிட்டார் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியில் உறைந்துள்ளேன். மன அழுத்தமாக இருக்கிறது. அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சேது மரண செய்தி கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். டாக்டராக சேவை செய்வது மட்டுமல்லாமல், யூடியூப் சேனல்களிலும் மக்களுக்கு தேவையான டிப்ஸ்களை கூறிவருபவர். நேற்று கூட இவரது இன்டர்வியூ பார்த்தேன். நாளை என்ன நடக்கும் என்பதை கூற இயலாது என்பது உண்மைதான் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

மனுஷனுக்கு வயசு 35 க்குள்ளதான் இருக்கணும். டாக்டர் வேற.
மரணம் இரக்கமற்றது. அதுவும் இந்த மாதிரி நேரத்தில இறப்புங்கிறது ரொம்பவே கொடுமை என விஜய் ரசிகர் ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பற்றி வீடியோ ஒன்றில் அருமையாக பேசியிருப்பார். அதை தடுப்பது எப்படி, சுத்தமாக இருப்பது குறித்தும் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகியது. இந்நிலையில் திடீரென இறந்துவிட்டார் எனவும் இணையவாசிகள் தங்கள் அனுதாபத்தை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...