முகப்பு சினிமா UNLOCK2: `நவம்பர் மாதம்வரை இலவச ரேஷன் பொருட்கள்!’- பிரதமர் மோடி #NowAtVikatan

UNLOCK2: `நவம்பர் மாதம்வரை இலவச ரேஷன் பொருட்கள்!’- பிரதமர் மோடி #NowAtVikatan

நவம்பர் மாதம்வரை இலவச ரேஷன் பொருட்கள்!

பிரதமர் மோடி பேசுகையில், “இலவச ரேஷன் பொருட்கள் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக தானியங்கள் வாங்க ரூ.90,000 கோடி செலவிடப்படும். பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டமும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

விவசாயிகளும் வரி செலுத்துவோரும் கொரோனா சமயத்தில் நாட்டுக்கு பேருதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவம்பர் மாதம் வரை 80 கோடி ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறிய அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்!

ஊரடங்கில் இரண்டாம் கட்ட தளர்வுகளை #UNLOCK2 என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்தத் தளர்வுகள் நாளை முதல் அமலாகும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் கூறுகையில், “உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

பிரதமர் மோடி

இரண்டாம் கட்ட தளர்வுகளுக்குள் தேசம் நுழைந்திருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஊரடங்கு விதிகளை மீறிச் செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம். இதில், சட்டத்துக்கு மேலாக எந்த ஒரு நபரும் கிடையாது. கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்’’ என்று பேசினார்.

Also Read: இந்திய சீன பிரச்னை… பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...